Theme Check

ஜாலியோ ஜிம்கானா.. வெளியானது ‘பீட்ஸ்’ படத்தின் 2வது பாடல்..!

ஜாலியோ ஜிம்கானா.. வெளியானது ‘பீட்ஸ்’ படத்தின் 2வது பாடல்..!

ஜாலியோ ஜிம்கானா.. வெளியானது ‘பீட்ஸ்’ படத்தின் 2வது பாடல்..!
X

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா..’ சற்று முன்னர் வெளியானது.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ‘அரபிக்குத்து..’ காதலர் தினத்தையொட்டி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது.

‘அரபிக்குத்து..’ பாடல் இதுவரை 197 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்தும், 5 மில்லியன் லைக்குகளை நெருங்கியும் சாதனைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா..’ வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், விஜய் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it