ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை.. ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்..!
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை.. ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்..!

மதுரை மாவட்டம் பள்ளபட்டியில் வரும் 15-ம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மகாராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கப்படும்.
அந்த காலகட்டத்தில் மட்டுமே மாவட்ட கலெக்டர்கள் அனுமதிப்பார்கள். மற்ற மாதங்களில் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அரசின் விளக்கத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஜூலை 15-ம் தேதி மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story

