Theme Check

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!
X

கடந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் பாஜகவைச் சேர்ந்த 5 தலைவர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது புல்வாமா பகுதியில் ராகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடப்பதால் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் ஒருசில நேரங்களில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி சவால் கொடுக்கின்றனர். எனினும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் அங்குள்ள திரால் பகுதியில் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவர் நேற்று இரவு தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 10.15 அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டத்தில் பண்டிதாவும், அவருடன் வந்த நண்பரின் மகளும் காயமடைந்தனர்.

எனினும் பலத்த காயமடைந்த ராகேஷை அங்கிருந்த மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நண்பரின் மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை நடந்த விசாரணையின்போது போலீசார் தரப்பில் கூறுகையில், பாஜக தலைவர் ராகேஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் உள்ள நபராக இருந்தார். ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது, தனது சொந்த கிராமத்துக்குச் செல்ல இருப்பதால், பாதுகாவலர்கள் வேண்டாம் என்று ராகேஷ் கூறிவிட்டுசென்றதாக போலீசார் கூறினர்.

அவருக்கு அளிக்கப்பட்ட போலீசார் பாதுகாப்பு இல்லாமல் ராகஷ் ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாஜக தலைவர் ராகேஷ் கொல்லப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பாஜக தலைவர், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it