அரசு ஊழியா்களுக்கு ஜன. 1 முதல்.. இறையன்பு வெளியிட்ட இனிப்பான செய்தி..!
அரசு ஊழியா்களுக்கு ஜன. 1 முதல்.. இறையன்பு வெளியிட்ட இனிப்பான செய்தி..!

அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தலைமை கணக்காயர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படியில் 7-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப்படி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இந்தத் தொகையை, ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

