Theme Check

இந்திய சீருடை அணிந்து மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ..!

இந்திய சீருடை அணிந்து மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ..!

இந்திய சீருடை அணிந்து மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ..!
X

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தில் அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் அணிக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முன்னதாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய சீருடையை அணிந்தவாறு சக வீரரை போல ஜார்வோ என்கிற ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்தார்.

அவரை மைதானத்தில் காவலர்கள் பிடித்து வெளியேற்றினர். இந்நிலையில் லீட்ஸில் நடைபெற்று வரும் 3-வது போட்டியின் போது முழு பேட்ஸ்மேன் போல முழு கிட்டுடன் அதே ரசிகர் ஜார்வோ என்கிற டீ ஷர்ட்டை அணிந்தவாறு மைதானத்திற்குள் வந்துவிட்டார்.

மீண்டும் அவரை மடக்கி பிடித்த காவலர்கள் வெளியேற்றினர். அப்போது ஜார்வோ வெளியேற மறுத்ததாக கூறப்படுகிறது. இது மைதானத்தில் இருந்த வீரர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததாலும், இங்கிலாந்து விளையாட்டுத்துறை பாதுகாப்பு வீரர்கள் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Tags:
Next Story
Share it