Theme Check

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்.. அதிர்ச்சியில் ஹர்திக் பாண்டியா !!

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்.. அதிர்ச்சியில் ஹர்திக் பாண்டியா !!

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்.. அதிர்ச்சியில் ஹர்திக் பாண்டியா !!
X

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்க இன்னும் சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. இந்த சீசனில் இரண்டு புதிய அணிகள் களமிங்குகின்றன. மேலும் மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்காக செம வெய்ட்டிங் என கூறலாம். வீரர்களும் அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

jason-roy

இந்த நிலையில், புதிய அணியாக அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸ், மெகா ஏலத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மென் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு எடுத்தது. அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார், பேட்டிங்க்கு கூடுதல் பலம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அந்த அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜேசன் ராய் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும், குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் மற்றும் அணியினருக்கு எனது வணக்கம். கனத்த இதயத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ஹர்திக்கிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

jason-roy

இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ-பபிள் சூழ்நிலை, என்னை வெகுவாக பாதித்துள்ளது. இந்த தருணத்தில் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதே சரியானது எனத் தோன்றுகிறது. எனினும், குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் பின்தொடர்வேன். ஹர்திக் தலைமையிலான டைட்டன்ஸ் அணி, முதல் சீசனிலேயே கோப்பையை வெல்வதற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே ராய் நல்ல ஃபார்மில் இருந்துவருகிறார். அவரும் இந்திய வீரரான ஷுப்மன் கில்லுடன் ஓப்பனிங் இறங்க தயாராகி வந்தனர். இதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் தான் ராய் விலகல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி முகமது ஷமி, மேத்யூ வேட், லாக்கி பெர்குசன் போன்ற முன்னணி வீரர்களை ஏலத்தில் வாங்கியது. இதேபோல், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:
Next Story
Share it