ரோபோ போல செயல்படும் தேர்தல் ஆணையம்- ஜெயக்குமார் கடும் விமர்சனம் !!
ரோபோ போல செயல்படும் தேர்தல் ஆணையம்- ஜெயக்குமார் கடும் விமர்சனம் !!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி பிரச்சாரத்தில் வாக்குசேகரித்தனர்.
இந்தநிலையில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீஸ் கமிஷனரை சந்தித்து இரண்டு முக்கியமான கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன்.

சென்னையில் ரவுடிகளை ஏவி விட்டு, கலவரத்தை உண்டாக்கி, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பூத் ஏஜெண்டுகளை மிரட்டுவது உள்ளிட்ட அராஜகங்களில் ஈடுபட ஆளுங்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. எனவே பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும், என்று கமிஷனரிடம் கேட்டுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை மிரட்டுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற அராஜக செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.
மாநில தேர்தல் ஆணையம் ரோபோ போல செயல்படுகிறது. அதன் ரிமோட் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது. அவர் சொல்வது போல்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, என விமர்சித்தார்.
newstm.in

