ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய நடிகர் அஜித் !!
ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய நடிகர் அஜித் !!

சென்னை கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் அஜித் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. நினைவு இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. இதனிடையே, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.
இந்நிலையில், சென்னை கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் சிலையை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது, விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்காக பல்வேறு நலதிட்டம் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா மட்டுமே. எனவே, ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவிற்கு, நடிகர் அஜித், உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. நடிகர் அஜித் திரையுலகில் பல்வேறு சங்கடங்களை சந்தித்தபோது, அவருக்கு உறுதுணயாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

