ஜெயலலிதாவின் சொத்தும் வந்தது... சேர்ந்தே வழக்கும் வந்தது.. தீபா, தீபக்கை சேர்க்க உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்தும் வந்தது... சேர்ந்தே வழக்கும் வந்தது.. தீபா, தீபக்கை சேர்க்க உத்தரவு!

ஜெயலலிதா 2008, 2009ஆம் ஆண்டுக்கான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு அவரது வாரிசுகளான தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கினார். அந்த வகையில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக கருதப்பட்டது. எனினும் தீர்ப்பு வரும் வேளையில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கடந்த 2008,2009ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறி நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதுகுறித்து ஜெயலலிதா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை தொடர்ந்து, அவர் மீதான குற்றசாட்டில் இருந்து விடுவித்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மேல்முறையிடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் நிலையில், இந்த வழக்கு இன்று மகாதேவன் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மரணத்த்திற்கு பிறகு அவரது வாரிசுகளாக தீபக், தீபா அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே ஜெயலலிதா வாழ்ந்தா வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் நடவடிக்கையை முடக்கிய சென்னை உயர்நீதிமன்றம், அந்த வீட்டை தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.
newstm.in

