ரஜினிக்கு வில்லனாக ஜெகபதிபாபு?! தேர்தலுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு!

ரஜினிக்கு வில்லனாக ஜெகபதிபாபு?! தேர்தலுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு!

ரஜினிக்கு வில்லனாக ஜெகபதிபாபு?! தேர்தலுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு!
X

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமது அடுத்தபடமான அண்ணாத்த சிவாவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கி உள்ளன. படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் 30 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்பார் என படக்குழு தெரிவித்துள்ளது. ஐதராபாத் திரைப்பட நகரில் படமாக்க வேண்டிய காட்சிகளும், ரஜினியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து காட்சிகளையும் சென்னையிலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் அண்ணாத்த படப்பிடிப்பை மறுபடியும் தள்ளி போடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகள், மற்றும் பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் போன்ற முண்ணனி நட்சத்திரங்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபுவை ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினியின் லிங்கா படத்திலும் ஜெகபதி பாபு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பின் மீண்டும் துவங்க இருக்கிறது. ரஜினி அரசியலை விட்டு விலகியிருந்தாலும், குஷ்பு விறுவிறுவென பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் ரஜினிக்கு வோட்டு இருக்கிறது. ஏற்கெனவே பாஜக மீது ரஜினிக்கு எப்போதும் தனி பாசம் இருக்கிறது. ரஜினியின் ஆதரவு எனக்கு தான் என்று குஷ்பு பேட்டியளித்து வருகிறார்.

Tags:
Next Story
Share it