ஆபரணத் தங்கம் விலை சரிவு ..!!
ஆபரணத் தங்கம் விலை சரிவு ..!!

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக தங்கம் தான் பெரும்பாலானோரின் முதலீடாக இருந்து வருகிறது. வீடுகளில் ஏதாவது கஷ்டம் வரும்போது கைகொடுக்கும் துணை என்றும் தங்கம் கருதப்படுகிறது. தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.
அண்மை காலத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் இது மிகப் பெரிய சுமையாக அமைந்துள்ளது.
நாட்டின் உள்ள பெரும்பாலான ஏழை மக்களின் கனவு என்பது தங்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு முதலீடாக சேர்த்து வைக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்களால் தங்கத்தை ஒரே நேரத்தில் 50 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்து வாங்குவது என்பது இயலாத காரியம்.இதை உணர்ந்த தங்க நகை விற்பனை கடைகள் அவர்களுக்காக தங்க நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளன.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,800-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 74,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

