Theme Check

1998-ம் ஆண்டு திருடப்பட்ட நகைகள்.. 23 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு..!

1998-ம் ஆண்டு திருடப்பட்ட நகைகள்.. 23 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு..!

1998-ம் ஆண்டு திருடப்பட்ட நகைகள்.. 23 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு..!
X

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதன் நிறுவனரான அர்ஜன் தஸ்வானி வீட்டில் கடந்த 1998-ம் ஆண்டு சில மர்மநபர்கள் நுழைந்தனர்.

தஸ்வானி மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை திருடிச் சென்றனர்.

அதே ஆண்டு இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன. எனினும், அந்த நகைகள் உரிமையாளரிடம் அப்போது ஒப்படைக்கப்படவில்லை.

இதற்கிடையே 2007ல் அர்ஜன் தஸ்வானி காலமானார். இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அர்ஜன் தஸ்வானிக்கு பதில், அவரது மகன் ராஜு தஸ்வானி இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோரே, மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை ராஜுவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கான ரசீதுகளை ஆதாரமாக காண்பித்து ராஜு அவற்றை பெற்றுக்கொண்டார்.

23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகளின் தற்போதையை மதிப்பு 8 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it