Theme Check

ஆண் நண்பர் கண் முன் பெண் மருத்துவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!

ஆண் நண்பர் கண் முன் பெண் மருத்துவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!

ஆண் நண்பர் கண் முன் பெண் மருத்துவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!
X

வேலூரில் பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்திய கும்பல் ஒன்று ஆண் நண்பர் கண் முன்னே அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரின் மையப் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரும், ஆண் மருத்துவரும் நண்பர்கள். இருவரும் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு படம் பார்த்துவிட்டு தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு சென்றனர். தாங்கள் ஷேர் ஆட்டோ தான் என்றும் ஏறிக் கொள்ளலாம் என்றும் கூறினர். அதை நம்பிய இருவரும் ஆட்டோவில் ஏறினர்.

auto

காட்பாடியில் இருந்து வேகமாக சென்ற ஆட்டோ, பாலாற்றங்கரைக்கு சென்று நின்றது. அந்த கும்பல் அவர்களை ஆட்டோவில் இருந்து இறக்கியது. அவர்களில் ஒருவர் ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டார்.

மற்ற 4 பேரும், ஆண் நண்பரின் கண் முன்னால் பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டு ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாயை எடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும். ஆண் மருத்துவரும் போலீசில் புகாரளிக்கவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு சத்துவாச்சாரியில் டிப்டாப் உடை அணிந்திருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Rape Girl

அதில் பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கும்பல் அவர்கள் தான் என தெரியவந்தது. அவர்களில் 2 பேர் 17 வயது சிறுவர்கள். மற்றவர்கள், 20 வயதான மணிகண்டன், 20 வயதான பார்த்திபன் என்பதும் தெரியவந்தது, தலைமறைவான 21 வயது சந்தோஷ் என்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தச் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள். ஏற்கனவே சில வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் அட்டையைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

newstm.in

Next Story
Share it