வடலூரில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஜோதி தரிசனம்!!
வடலூரில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஜோதி தரிசனம்!!

வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் பிறந்த வள்ளற்பெருமான் என்கின்ற இராமலிங்க வள்ளலார் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். இவர் இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார்.
ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். அங்கே, தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 151ஆவது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
newstm.in

