Theme Check

‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘கடல்’ தீபன் காலமானார்! கதறியழுத சீமான்!

‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘கடல்’ தீபன் காலமானார்! கதறியழுத சீமான்!

‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘கடல்’ தீபன் காலமானார்! கதறியழுத சீமான்!
X

கடலூர் செல்லகுப்பத்தைச் சேர்ந்தவர் கடல் தீபன். பொறியாளரான இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் கடல் தீபன். காவிரி நீர் பிரச்சனையின் போது போராட்டத்தில் ஈடுபட்டு குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கடல் தீபன் பின்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கடல் தீபன்
இந்நிலையில், உடல் நலக்குறைவால் கடல் தீபன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய களப்போராளியை இழந்து விட்டது.



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அன்பு தம்பியாகவே இருந்தவர் கடல் தீபன். நம்பிக்கையான தம்பியாகவும், நெருக்கமான தம்பியாகவும் இருந்த கடல் தீபனின் மரணம் சீமானை, நிலைகுலையச் செய்துள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு மிகப் பெரிய இழப்பு. கடல் தீபனின் மறைவு செய்தி கேட்டு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:
Next Story
Share it