கமல்ஹாசன் மகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. பாஜக பரபரப்பு புகார் !
கமல்ஹாசன் மகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. பாஜக பரபரப்பு புகார் !

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி உடன் நிறைவுப் பெற்றது.
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது இரு மகள்களுடன் சென்று வாக்களித்தார். சென்னையில் வாக்களித்த பின்னர் அவர் தான் களம்காணும் கோவை தெற்கு தொகுதிக்கு விரைந்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வாக்குசாவடிகளை பார்வையிட சென்ற போது, அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் உடன் சென்று இருந்தார். வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது என்ற நிலையில், வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்த போது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தது விதிமீறல் என பாஜக புகார் கூறியுள்ளது.
எனவே ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பாஜக நிர்வாகி தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார்.

இது சட்டப்படி குற்றமாகும் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அதன்படி ஸ்ருதிஹாசன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.
newstm.in

