கமல் + விஜய்காந்த் + சசிகலா + சரத்குமார்! திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி!

கமல் + விஜய்காந்த் + சசிகலா + சரத்குமார்! திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி!

கமல் + விஜய்காந்த் + சசிகலா + சரத்குமார்! திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி!
X

தேர்தல் அரசியல் தமிழகத்தில் களை கட்டி வருகிறது. நாளுக்கு நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த சதுரங்க விளையாட்டை அரசியல் கட்சிகள் விளையாடி வருகின்றன. சசிகலாவின் பங்கு இந்த தேர்தலில் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கூட்டணியிலும், தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் தரப்படுவதில்லை என்று அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையைத் தவிர்த்து விட்டு, தேமுதிக முக்கிய நிர்வாகிகள்,

பேச்சுவார்த்தையைத் தவிர்த்து விட்டு திரும்பி சென்றது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளதாகவும், சீட் விஷயத்திலும் அதிக கறார் காட்டுவதாகவும், பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறார்கள்.

பிரேமலதாவும், சுதீஷூம் ஏற்கெனவே கூட்டணிக்காக தேமுதிக காத்திருக்கவில்லை என்றும், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலுமே தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காமல், தயாராகவே உள்ளது என்றும் கூறியிருந்தனர் கூட்டணி சாத்தியப்பட்டால், 20,25 சீட்கள் மட்டுமே தேமுதிகவுக்கு கிடைக்கும் என்கிற சூழலில் விருப்ப மனு தாக்கலிலும், தேமுதிக அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுகவுக்கு அதிர்ச்சியளித்தது.

பாமகவுடனான பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டி, கூட்டணியில் பாமகவின் நிலை உறுதியாகிவிட்ட நிலையில், தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது. சென்னையில் தங்கியிருந்த அமித்ஷா, சசிகலாவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால், பாஜகவுடனான சீட் விவகாரமும் இன்னும் இறுதி கட்டத்தை அடையவில்லை. இந்நிலையில், பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் கிளம்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் மக்கள் நீதி மைய்யத்துடன் தேமுதிக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நடிகர் விஜய்காந்த்துடன், ஏற்கெனவே நடிகர் சரத்குமார் இணைந்து நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றிருந்தனர். பல வருடங்களாக கோடிக்கணக்கில் கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை திறம்பட நடத்தி மொத்த கடனையும் அடைத்து விட்டு, நடிகர் சங்கத்திற்கு என தனியாக வங்கியில் வைப்பு நிதியும் வைத்திருந்தார் நடிகர் விஜய்காந்த். தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் விஜய்காந்த்தின் காலம் தான் பொற்காலம் என்கின்றனர். அரசியல் கட்சி துவங்கும் போது, நடிகர் சங்க பதவியை ராஜிநாமா செய்து விட்டே களத்தில் இறங்கினார் கேப்டன். கேப்டனுனான நட்பின் அடுத்த கட்டமாக சரத், கமல், விஜய்காந்த் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

சரத்குமார் மரியாதை நிமித்தமாகவே சசிகலாவை சந்தித்ததாக சொன்னாலும், அந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி, அமித்ஷா ப்ரெஷர் கொடுத்தும் கூட்டணிக்குள்ளோ, கட்சியிலோ சசிகலா நுழைவதை பிடிவாதமாக மறுத்து வருகிறார். இந்நிலையில், இந்த கூட்டணிக்குள் சசிகலாவும் நுழைந்தால் திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளுக்குமே இந்த தேர்தல் பெரும் சவாலான தேர்தலாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Tags:
Next Story
Share it