மீண்டும் வம்பு வளர்த்த கங்கனா ரனாவத்- பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி..!
மீண்டும் வம்பு வளர்த்த கங்கனா ரனாவத்- பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி..!

இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகை கங்கனா ரனாவத், பாடலாசரியரும் பிரபல திரைப்பட நடிகை ஷப்னா ஆஸ்மியின் கணவருமான ஜாவேத் அக்தர் குறித்து அவதூறாக பேசினார் என்று சொல்லப்படுகிறது.அதை முற்றிலும் மறுத்த ஜாவேத் அக்தர், கங்கனா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கங்கனா ரனாவத் தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம்.

இந்நிலையில் ஜாவேத் அக்தர் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு மார்ச் 1-ம் தேதி நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது நீதிமன்றம். ஆனால் இன்று அவர் ஆஜராகததால் கங்கனா மீது பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

