கர்ணன் திரைப்படத்திற்கு உலகளவில் கிடைத்த வரவேற்பு.. சர்வதேச டாப் 5 படங்களில் ஒன்று !!

கர்ணன் திரைப்படத்திற்கு உலகளவில் கிடைத்த வரவேற்பு.. சர்வதேச டாப் 5 படங்களில் ஒன்று !!

கர்ணன் திரைப்படத்திற்கு உலகளவில் கிடைத்த வரவேற்பு.. சர்வதேச டாப் 5 படங்களில் ஒன்று !!
X

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஓடிடியில் பார்க்கக் கிடைக்கும் சிறந்த ஐந்து திரைப்படங்களை தேர்வு செய்து மாதம்தோறும் வெளியிடும். இந்த மாதம் அவர்கள் தேர்வு செய்துள்ள ஐந்தில் ஒன்று மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம்.

mari danush

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்தப் படம் விமரிசன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. எனினும் கொரோனா காலம் என்பதாலும் படம் வெளியான அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வசூல் பாதிக்கப்பட்டது.

mari danush

கர்ணன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்தார். லால், யோகி பாபு, நட்டி என்கிற நடராஜன், லக்ஷ்மி பிரியா, ஜி.எம்.குமார், பூ ராமு, அழகம் பெருமாள், சண்முகராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இசை இடப்படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

இந்த நிலையில் சர்வதேச நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் , உலக அளவில் பார்க்க வேண்டிய 5 படங்களைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பட்டியலில் கர்ணன் படமும் இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரே படம் கர்ணன் மட்டும் தான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

mari danush

1990களில் நடைபெற்ற உண்மைக் கதையை வைத்து மிக நேர்த்தியாக இயக்குநர் மாரி செல்வராஜ் திரைக்கதையை அமைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ் சூப்பர் ஸ்டார் தனுஷ் மிகுந்த ஆக்ரோஷமாக தனது வேடத்தைக் கையாண்டிருப்பதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இது சர்வதேச அளவிலான பட்டியல்.

  • The Father Who Moves Mountains (ருமானியா - நெட்பிளிக்ஸ்)
  • Koshien: Japan’s Field of Dreams (ஜப்பான் - அமேசான் பிரைம் வீடியோ)
  • I Never Climbed the Provincia (சிலி - அமேசான் பிரைம் வீடியோ)
  • Karnan (இந்தியா - அமேசான் பிரைம் வீடியோ)
  • The Cloud in Her Room (ஹாங்காங் - முபி)

newstm.in

Tags:
Next Story
Share it