”கர்ணன் குரல் உங்களுக்கு கேட்கும்” தனுஷ் ட்வீட்..!
”கர்ணன் குரல் உங்களுக்கு கேட்கும்” தனுஷ் ட்வீட்..!

கர்ணன் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்காக டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
’பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் ‘கர்ணன்’. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டு, விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
முன்னதாக தொடங்கப்பட்ட கர்ணன் பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தளர்வுகள் தொடங்கிய பின்னர், மீண்டும் காட்சிகள் படமாக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் படம் திரைக்கு வரும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், டப்பிங் பணிகல் முடிந்தன... விரைவில் கர்ணன் குரல் உங்களுக்கு கேட்கும் என குறிப்பிட்டுள்ளார்.
#karnan dubbing completed. You WILL hear his voice 🗡 🐘 pic.twitter.com/T2Vkz32bky
— Dhanush (@dhanushkraja) February 9, 2021

