Theme Check

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றம்!!

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றம்!!

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றம்!!
X

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியது. எனினும், கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் எப்படியாவது மேகதாது அணையை கட்டி தீருவோம் என கர்நாடகா கூறி வருகிறது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது. ஆனால் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

megathathu

இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 21ஆம் தேதி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீர்மானம் கொண்டு வந்தார் . அப்போது சட்டவிரோதமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.

newstm.in

Next Story
Share it