Theme Check

தமிழகத்தின் முக்கிய பிரபலமும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஊரான் அடிகள் காலமானார்..!!

தமிழகத்தின் முக்கிய பிரபலமும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஊரான் அடிகள் காலமானார்..!!

தமிழகத்தின் முக்கிய பிரபலமும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஊரான் அடிகள் காலமானார்..!!
X

சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர் ஊரான் அடிகள். திருச்சி மாவட்டம் சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்த இவர், 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார்.

Ooran-Adigal

இவர் தமது இருபத்திரண்டாம் வயதில் "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்து பல்வேறு சமய நூல்களை வெளியிடுள்ளார். 1970-ம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர்.

1

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். மறைந்த ஊரான் அடிகள், மறைந்த முன்னாள் முதலவரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நெருங்கிய நண்பர். மேலும், ஒளவை நடராசன் போன்ற செற்பொழிவாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

இவரது மறைவுக்கு சொற்பொழிவாளர், தமிழ் அறிஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it