கருணாநிதி பெயர் அதிரடி நீக்கம் ! வெடித்தது தி.மு.க - காங்கிரஸ் மோதல் !!
கருணாநிதி பெயர் அதிரடி நீக்கம் ! வெடித்தது தி.மு.க - காங்கிரஸ் மோதல் !!

புதுச்சேரி அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலை என்பதை நீக்கியதால், தி.மு.க - காங்கிரஸ் மோதல் வெடித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு நாள் சுற்றுப் பயணமாக காரைக்காலுக்கு வந்தார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில், காரைக்கால் மேற்கு புறவழிசாலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு, புறவழி சாலையை திறந்து வைத்தார்.
அப்போது. காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமையில் அங்கு திரண்டு வந்த திமுகவினர், புதுச்சேரி அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலை என, ஏன் பெயர் சூட்டவில்லை என்று மேடையில் இருந்த முதல்வர் நாராயணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

மேலும், திறப்பு விழா அழைப்பிதழிலும், டாக்டர் கலைஞர் புறவழி சாலை என பதிவு செய்யாமல், மேற்கு புறவழி சாலை என்று இடம் பெற்று இருந்தது. இதையும் சுட்டிக்காட்டிய திமுகவினர், காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளதா? இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். இதனால், நாராயணசாமி மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட பொறுப்பு கலெக்டரை அழைத்து, அந்த சாலையின் பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் மேற்கு புறவழிசாலை என எழுதுமாறு, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.
"இந்த சம்பவம் மூலம் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி மோதல், கருத்து மோதல், மன வருத்தம், கூட்டணி பிரிவு உள்ளதை வெளிப்படையாக காணலாம்" என அரசியல் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

