மறைந்தது கருணாநிதியின் நிழல்.. உதவியாளர் சண்முகநாதன் காலமானார்..!
மறைந்தது கருணாநிதியின் நிழல்.. உதவியாளர் சண்முகநாதன் காலமானார்..!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.
சுமார் 50 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். ‘கருணாநிதியின் நிழல்’ என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன், 1967-ம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசி காலம் வரை உதவியாளராக இருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார்.
Next Story

