Theme Check

காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் தலைவர் கிலானி உயிரிழப்பு ! பாதுகாப்பு அதிகரிப்பு !

காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் தலைவர் கிலானி உயிரிழப்பு ! பாதுகாப்பு அதிகரிப்பு !

காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் தலைவர் கிலானி உயிரிழப்பு ! பாதுகாப்பு அதிகரிப்பு !
X

காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி காலமானார்.

காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிகழ்ந்து வருவது அனைவரும் தெரிந்த கதை. அதேபோல சில பிரிவினைவாத இயக்கங்களும் காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. அப்படி காஷ்மீர் பிரிவினையைக் கோரி தீவிரமாகச் செயல்பட்டு வந்த இயக்கங்களில் முக்கியமானது ஹூரியத் மாநாட்டுக் கட்சி. இந்த கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. சையது அலி ஷா கிலானி 1972, 1977, 1987 ஆகிய ஆண்டுகளில் காஷ்மீர் சட்டசபைக்குத் தேர்வானவர்.

kilani

சுமார் 27 ஆண்டுகளாக இக்கட்சியில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வந்த சையது அலி ஷா கிலானி, கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலக்கியிருந்தார். இந்நிலையில், 92 வயதான காஷ்மீரின் மூத்த பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானி நேற்றிரவு காலமானார். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சையது அலி ஷா கிலானியின் மறைவுக்கு காஷ்மீர் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி தனது ட்விட்டரில், கிலானியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பல விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது உறுதி மற்றும் தன்னம்பிக்கைக்காக நான் அவரை மதிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it