திருமணத்திற்குப்பிறகு முன்னாள் காதலனுடன் இணையும் கத்ரீனா கைஃப் !
திருமணத்திற்குப்பிறகு முன்னாள் காதலனுடன் இணையும் கத்ரீனா கைஃப் !

திருமணம் முடிந்த கையோடு முன்னாள் காதலனுடன் சேர்ந்து ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடியாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். இவரும் நடிகர் விக்கி கௌஷலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஜோடி கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள், பாலிவுட் நடிகர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விக்கி கௌஷல்- கத்ரீனா கைஃப் ஜோடி தேனிலவை முடித்துக்கொண்டு சமீபத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்த புகைப்படங்கள் வெளியாகின. எனினும் திருமணம் முடிந்து ஒரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பவிருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப்.
சல்மான்கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். கத்ரீனா கைஃப் மற்றும் சல்மான் கான் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சில ஆண்டுகள் நெருங்கி பழகி பாலிவுட் திரையுலகில் காதலர்களாக வலம் வந்தனர்.

எனினும் பல்வேறு காரணங்கள் இருவரும் பிரிந்தனர். கத்ரீனா கைஃப் தற்போது விக்கி கௌஷல்லை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் தான், சல்மான் கான் ஜோடியாக கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் ஹீரோயினாக நடித்துள்ள கத்ரீனா கைஃப்-சல்மான் கான் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ’டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்லியில் நடைபெறுகிறது.
newstm.in

