தேசியக் கொடிக்கு பதில் காவிக் கொடி பறக்கும் : பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!!
தேசியக் கொடிக்கு பதில் காவிக் கொடி பறக்கும் : பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!!

தேசியக் கொடிக்கு பதில் காவிக் கொடி பறக்கும் என பா.ஜ.க மூத்த தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே அகண்ட பாரதமாக இந்தியாவை மாற்றுவோம், தேசிய கொடிக்கு பதில் காவிக் கொடி பறக்கும் என தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைவர்கள் பேசி வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.
முன்னதாக பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் என்றும் கர்நாடக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். இந்நிலையில், கே.எஸ்.ஈஸ்வரப்பா இந்தியாவில் தேசியக் கொடிக்குப் பதிலாகக் காவிக்கொடி பறக்கும் என பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய அவர், காவிக்கு மரியாதை என்பது நேற்றோ இன்றோ தொடங்கவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளாக அது மதிக்கப்படுகிறது. காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ் கொடி என்றாவது ஒரு நாள் தேசியக் கொடியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
தியாக உணர்வை வெளிக்கொணர, ஆர்.எஸ்.எஸ் காவிக் கொடியை முன் வைத்து பிரார்த்தனை செய்கிறோம். அரசியலமைப்பின் படி மூவர்ணக்கொடியான தேசியக் கொடிக்கும் தகுதியான மரியாதையை நாங்கள் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
newstm.in

