கேரள நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு பங்கு!?
கேரள நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு பங்கு!?

கேரள திரைப்பட நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகள், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், தற்போது செல்போன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விசாரணைக் குழுவினர் இந்த மூன்று செல்போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கேரளா, கொச்சி குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
newstm.in

