மகளை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா பாதிப்பு !!
மகளை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை அதன் வீரியம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அசுர வேகம் எடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கேரள சட்டமன்றத்தேர்தலையொட்டி பல்வேறு கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றிருந்தார். இதைத்தொடர்ந்து பினராயி விஜயனின் மகளுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகியது.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதியாகிய போதிலும் அவருக்கு உடலில் வேறு முக்கிய பிரச்னைகள் இல்லையென்பதால் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் பினராயி விஜயனுக்கு 76 வயது ஆவதால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
newstm.in

