Theme Check

கேரள தம்பதியின் 18 வருட ஏக்கம் தீர்ந்தது.. ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள்..!

கேரள தம்பதியின் 18 வருட ஏக்கம் தீர்ந்தது.. ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள்..!

கேரள தம்பதியின் 18 வருட ஏக்கம் தீர்ந்தது.. ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள்..!
X

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. இந்தத் தம்பதிக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், 18 வருடங்களுக்கு மேலாக குழந்தை பாக்கியம் இல்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிரசன்னா குமாரி கர்ப்பமானார். குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை வழங்கியது.

அன்றில் இருந்து மருத்துவரின் ஆலோசனைப்படி பாதுகாப்புடன், கண்ணும் கருத்துமாக வயிற்றில் இருந்த குழந்தையை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை பிரசன்ன குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய கணவர் சுரேஷ், பிரசன்ன முகாடியை கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், பிரசன்ன குமாரியின் வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘எங்கள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல்முறை.

ஆகையால், அந்தப் பெண்ணின் பிரசவ செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது நான்கு குழந்தைகளும், தாயும் நலமாக இருக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
Next Story
Share it