Theme Check

சனி, ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு - கேரள அரசு அறிவிப்பு..!!

சனி, ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு - கேரள அரசு அறிவிப்பு..!!

சனி, ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு - கேரள அரசு அறிவிப்பு..!!
X

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் கொரோனவை தொடர்ந்து ஜிகா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கேரளா கொரோனாவில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், கூடுதல் சுமையாக ஜிகா பரவி வருகிறது.

நேற்று வரை 23 பேர் கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். 5 பேரில் இரண்டு பேர் அனயரா பகுதியைச் சேர்ந்தவர்கள். குன்னுகுழி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டையிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகமே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், கேரள மாநிலம் கொரோனா உடன் சேர்ந்து ஜிகா வைரஸூக்கு எதிராகவும் போராடி வருகிறது.

இந்நிலையில் இரண்டு வைரஸ்களின் தாக்கம் அதிகமாகி வருவதால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளதாவது: மாநிலம் முழுவதும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் ஊரடங்கு மேலும் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தே நடமாட வேண்டும்.

மேலும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இப்போதைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. எனவே வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும் என கூறினார்.


Tags:
Next Story
Share it