முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள எம்எல்ஏ பாராட்டு !

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள எம்எல்ஏ பாராட்டு !

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள எம்எல்ஏ பாராட்டு !
X

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதனைகள் குறித்து மலையாள டிவியில் கேரள எம்எல்ஏ விஷ்ணுநாத் புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம், கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி ஒரே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியும், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கட்சியின் ஆட்சியும் அமைந்தது.

stalin

இந்த நிலையில், கேரளாவில் உள்ள ஒரு மலையாள தொலைக்காட்சியில் கேரள அரசின் 100 நாள் சாதனை குறித்த விவாதம் நடந்தது. இதில் கண்டரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுநாத் பங்கேற்றார். அப்போது, தமிழக அரசு கடந்த 100 நாட்களில் கேரள அரசு செய்ததை விட பல மடங்கு சாதனைகளை செய்துள்ளது என்றார். மேலும் புள்ளி விவரங்களுடன் புகழ்ந்து பேசினார்.

அனைவருக்கும் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்கியது, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஸ்டாலின் அரசு அமல்படுத்தி உள்ளது என கூறினார்.

stalin

ஆனால் கேரளாவில் பினராயி விஜயன் அரசு, இதுபோன்று எந்த மக்கள் நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறி தமிழக அரசை பாராட்டினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it