Theme Check

இரும்பு பட்டறையில் வேலை செய்யும் கே.ஜி.எஃப் இசையமைப்பாளர்!!

இரும்பு பட்டறையில் வேலை செய்யும் கே.ஜி.எஃப் இசையமைப்பாளர்!!

இரும்பு பட்டறையில் வேலை செய்யும் கே.ஜி.எஃப் இசையமைப்பாளர்!!
X

கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஊரடங்கின்போது இரும்பு பட்டறையில் வேலை செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.ஜி.எஃப் – 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பற்றி வெளியாகியிருக்கும் செய்தி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

கேஜிஎஃப் படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை. தன் இசையால் படத்திற்கு கூடுதல் பிரம்பிப்பை ஏற்படுத்தியுள்ளார் ரவி பஸ்ரூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இரும்புப் பட்டறையில் வேலை செய்துள்ளார்.

கர்நாடகாவில், குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் எளிய குடும்ப பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ரவி பஸ்ருர். தனது சிறு வயது முதலே இசையின் மீது இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.

ravibasura

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் தொழிலாளியாக சிற்பங்களை செய்து வந்துள்ளார். இவருக்கு கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலன்தான் முதல் முதலாக இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார்.

அவர் இயக்கிய 'உக்ரம்' என்ற படத்தில் தான் ரவி பஸ்ரூர் இசையமைப்பாளருக்கான தனது பயணத்தை தொடங்கினார். பிறகு அடுத்தடுத்து கன்னடப் படங்களை மட்டுமே இசையமைத்து வந்த இவரை கே.ஜி.எஃப் படம் உலக அளவிற்கு கொண்டு சேர்த்துள்ளது.

ravibasura

சினிமாவில் இசையமைத்து வந்தாலும் தற்போதும் தனது தந்தையின் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தந்தை பட்டறையில் வேலை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it