குஷ்பூவின் சின்னத்தம்பிக்கு வயது 30!

குஷ்பூவின் சின்னத்தம்பிக்கு வயது 30!

குஷ்பூவின் சின்னத்தம்பிக்கு வயது 30!
X

இசைஞானி இளையராஜாவின் இசையில், பி.வாசு இயக்கிய பிரபு - குஷ்பூ நடிப்பில் வெளி வந்து தமிழ்த்திரையுலகைப் புரட்டிப் போட்ட சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகிறது.

சிறுவயதில் இந்திப்படத்தில் நடித்து வந்த குஷ்பூ, கன்னடப் படமான ரணதீரா வில் கதாநாயகியாக அறிமுகமானர். ஜாக்கி ஷெராஃப் - மீனாட்சி சேஷாத்திரி நடித்த ஹீரோ தர்மத்தின் தலைவன் படத்தில் இரண்டாவது நாயகியாக, பிரபுவுக்கு ஜோடியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் குஷ்பூ.

அடுத்து வருஷம்16 படத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்தவர் சின்னத்தம்பி படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டார் குஷ்பூ. கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்து கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

இன்றோடு சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்துள்ளார் குஷ்பூ. இசைஞானி இளையராஜா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் கே.பாலு, நடிகர் பிரபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.



Tags:
Next Story
Share it