மன்னிப்பு கேட்டார் குஷ்பு..!
மன்னிப்பு கேட்டார் குஷ்பு..!

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை திமுக ஏற்றதில் இருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த உபயோகம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சை ஷேர் செய்து பாஜக உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பல்வேறு டிவிட்களை செய்து இருந்த குஷ்பு, இந்தியா என்பது மாநிலங்களில் உருவாக்கப்பட்டது இல்லை.
முதல்வர் ஸ்டாலின் வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். மாநிலங்கள்தான் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இதற்கு முன் ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக பயன்படுத்தியது இல்லை. இப்போது ஆட்சிக்கு வந்ததும் ஒன்றியம் என்று கூறுகிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தார்.
இதையடுத்து, குஷ்புவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்தனர். இதைப் பற்றி நிறைய மீம்களையும் வெளியிட்டு இருந்தனர். அது எப்படி இந்தியா மூலம் மாநிலங்கள் உருவாக்கப்படும். மாவட்டங்கள் இணைந்தது மாநிலம், மாநிலங்கள் இணைந்ததுதான் இந்தியா. ஆனால் குஷ்பு இதற்கு அப்படியே எதிராக பேசுகிறார். குஷ்பு பேசுவது தவறு என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் செய்தனர்.
As they say, the one who says sorry, it bigger than the one who lives in denial. I am sorry for my tweet day before. I was wrong. I made a blunder n got carried away. You turn blind at times in an argument. Many leaders have done it in the past, but I learn from my mistakes.🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 25, 2021
இந்நிலையில், இது தொடர்பாக செய்த ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்டு தனது டிவிட்டரில் குஷ்பு கூறியுள்ளதாவது; “தனது தவறை ஒப்புக்கொள்ளாதவர்களை விட தவறுக்கு மன்னிப்பு கேட்பவர்கள் உயர்ந்தவர்கள். என்னுடைய ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
நான் சொன்னது தவறு. தவறான விஷயத்தை போஸ்ட் செய்துவிட்டேன். விவாதத்தின் போது அவ்வப்போது நாம் தவறு செய்வோம், பல தலைவர்கள் இதற்கு முன் இப்படி தவறு செய்துள்ளனர், நான் என்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன்” என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

