Theme Check

"ஒரு புறம் கிரண்பேடி தொல்லை - மறுபுறம் பிரதமர் மோடி தொல்லை" முதல்வர் நாராயணசாமி விரக்தி பேச்சு !

"ஒரு புறம் கிரண்பேடி தொல்லை - மறுபுறம் பிரதமர் மோடி தொல்லை" முதல்வர் நாராயணசாமி விரக்தி பேச்சு !

ஒரு புறம் கிரண்பேடி தொல்லை - மறுபுறம் பிரதமர் மோடி தொல்லை முதல்வர் நாராயணசாமி விரக்தி பேச்சு !
X

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலும், மாநில பொறுப்பாளர் தினே‌‌ஷ் குண்டுராவ் முன்னிலையிலும் நடைபெற்றது.

அப்போது, கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்குவது இல்லை. தேவையில்லாத கேள்விகள் கேட்டு கோப்புகளை திரும்பி அனுப்பி வருகிறார். இதனால் அறிவித்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியவில்லை. தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

புதுச்சேயில் ஒருபுறம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொல்லை, மற்றொரு புறம் பிரதமர் மோடி தொல்லை. புதுவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்குவது இல்லை என வேதனை தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.கவிடம் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை இது தான் உண்மை நிலவரம். அதை மறைத்து அவர்கள் அரசியல் செய்து வருகின்றனர்.

பா.ஜ.கவினர் தற்போதுதான் வேட்பாளர்களை பிடித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், நம்மிடம் பலமான வேட்பாளர்கள் ஏற்கனவே நிறைப்பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். முதல்வர் நாராயணசாமியின் இந்த புலம்பல், காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it