கொரோனோ என்னும் கொடூரன்.... தாக்கினால் மரணமா.. பீதியில் மக்கள்...
கொரோனா வைரஸ் ஒருவித விலங்கிடமிருந்து பரவியிருக்கிறது என்பதை உறுதி செய்தார்கள். பொதுவாக விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் வைரஸானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவினால் அதுமிகவும் கொடூர விளைவை உண்டாக்கும். இதை சீனாவின் தேசிய மருத்துவ துறையும், உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது.

கடந்த மாதம் சீனாவில் வுஹான் என்னும் நகரில் இருந்த ஒருவர் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவரிடம் வந்தார். உடல் வெப்பநிலை அதிகம், இருமல் என்று வந்த அவருக்கு அடுத்த சில நாளில் மூச்சுத்திணறல் பிரச்சனை வந்தது. இவை அதிகரித்த போது என்ன நோய் என்று கண்டுபிடிப்பதில் மருத்துவருக்கும் புதிராகவே இருந்தது. ஆனால் இதே போன்ற அறிகுறிகளுடன் பலரும் வரவே மருத்துவர்கள் விழித்துகொண்டார்கள். உடனடியாக மருத்துவர்கள் சுகாதார துறையை நாடினார்கள். அதற்குள் இந்த அறிகுறிகளோடு மருத்துவமனையை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டார்கள்.

இது ஒருவிதமான ஆட்கொல்லி வைரஸ் தான் என்பதை உறுதி செய்தது டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று. உடலில் பரவிய இந்த வைரஸ் நுண்ணோக்கியில் பார்க்கும் போது மகுடம் போல் காட்சி அளித்ததாம். மகுடம் என்றால் கொரோனா என்ற பெயராம் அதானால் தான் இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயர் வைத்துவிட்டதாக ஒரு புறம் கூறினாலும் பிரச்சனை அதுவல்ல. ஆளைகொல்லும் இந்த வைரஸ் காரணம் என்ன என்பதுதான்.
வுஹான் மாநிலத்தில் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் இருந்தவர்களுக்கும், அங்கு சென்றிருந்தவர்களுக்கும் தான் இந்த வைரஸ் தொற்று என்பது உறுதியானது. அதன் பிறகுதான் இது ஒருவித விலங்கிடமிருந்து பரவியிருக்கிறது என்பதை உறுதி செய்தார்கள். பொதுவாக விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் வைரஸானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவினால் அதுமிகவும் கொடூர விளைவை உண்டாக்கும். இதை சீனாவின் தேசிய மருத்துவ துறையும், உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது.

இவை நடப்பதற்குள் எண்ணற்ற உயிரை காவு வாங்கிவிட்டது. இதுவரை 136 பேர் இந்த வைரஸ் தாக்கி இறந்திருப்பதாக சீன அரசு அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. எனினும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் பலி எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக வரும் வைரஸ் தான் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. ஏனெனில் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று வந்தாலே நிம்மோனியாவில் பாதிப்பை உண்டாக்கி உயிரைகுடித்துவிடும் என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வைரஸ்க்கு மருந்துகண்டுபிடிக்காத சூழலில் இவை சீன நாட்டை தாண்டி வளர்ந்த நாடுகள் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியாவிலும் பரவ தொடங்கியிருக்கிறது. இப்போது தெரிகிறதா ஏன் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கீறார்கள் என்று இது குறித்து நாம் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
newstm.in

