கிருஷ்ணகிரியில் சம்பவம்.. இளம்பெண் படத்தை இன்ஸ்டாவில் ஆபாசமாக வெளியிட்ட சிறுவன் கைது..!
கிருஷ்ணகிரியில் சம்பவம்.. இளம்பெண் படத்தை இன்ஸ்டாவில் ஆபாசமாக வெளியிட்ட சிறுவன் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த இவரது படத்தை ஓசூரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பதிவிறக்கம் செய்தார்.
பின்னர், போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அந்த கணக்கின் முகப்பு படமாக அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து அந்த சிறுவன் வைத்தார். மேலும், அந்த இளம்பெண் குறித்து ஆபாசமான வரிகளுடன் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து அறிந்த அந்த இளம்பெண், சம்பந்தப்பட்ட சிறுவனிடம் கேட்டார். அப்போது அந்த சிறுவன் இளம்பெண்ணை மிரட்டியதுடன், ஆபாச வீடியோ குழுக்களில் உனது புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தார். அவர் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான சிறுவன் இதேபோல வேறு பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளாரா? அல்லது அவர்களை மிரட்டி உள்ளாரா? என கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

