பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் விலகல்..?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் விலகல்..?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் விலகல்..?
X

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து நடிகர் குமரன் விலகிவிட்டதாக வெளியான செய்திகளுக்கு, சமூகவலைதளம் வாயிலாக அவர் பதிலளித்துள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மேலும் இந்த தொடர் இந்தியாவின் 8 மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. இலங்கையிலும் தினசரி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

தமிழில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம், காவ்யா என பலரும் நடித்து வருகின்றனர். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் கூட்டுக் குடும்பங்களுக்கு இடையேயான பிணைப்பு போன்றவை தான் இந்த நாடகத்தின் மையக் கருத்து.

இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், கதிர் - முல்லையாக நடித்து வந்த குமரன் – சித்ரா ஜோடிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் சித்ரா தற்கொலைக்கு பிறகு சீரியல் குடும்பமே சோகத்தில் மூழ்கிறது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா முல்லையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரன் நடித்து வரும் கதிர் கதாபாத்திரத்தை நாடகத்தில் பார்க்க முடியவில்லை. அவர் எங்கோ வெளியூருக்கு சென்றுள்ளது போல திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரன் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால், இனி அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கமாட்டார். அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிப்பார் என்று கூறப்பட்டது.

தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் குமரன், நேற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், தனது கதிர் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து குமரன் விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Tags:
Next Story
Share it