Theme Check

கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!
X

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு, பள்ளியில் முன்பு வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் படங்களுக்கு பெற்றோர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இறந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை சம்பவம் நடந்த பள்ளியின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

அங்கு, குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் இன்று காலை நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர், பொதுமக்கள், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் நகர மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, ஜூலை மாதம் 16-ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

Next Story
Share it