Theme Check

யூ-டியூபில் ஆபாச வீடியோ.. ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடி மீது குண்டாஸ்..!

யூ-டியூபில் ஆபாச வீடியோ.. ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடி மீது குண்டாஸ்..!

யூ-டியூபில் ஆபாச வீடியோ.. ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடி மீது குண்டாஸ்..!
X

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ‘ரவுடி பேபி' சூர்யா மற்றும் சிக்கா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மதுரை, திருநகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (33). திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும் யூ-டியூப்' சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.

அத்துடன், தனக்கு வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், “போலீசில் புகார் கொடுத்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது” என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கை.
Rowdy Baby Surya And Sikka Arrest | ரவுடி பேபி சூர்யா கைது
இவரது நண்பரான சிக்காவும் இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மதுரையில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா - சிக்கா ஜோடி மீது தமிழகம் முழுவதும் புகார்கள் இருப்பதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. இவர்கள் மீது, ஏற்கெனவே சில ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை சேகரித்து வரும் போலீசார், அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

Next Story
Share it