விஜய் டிவியில் தொடரும் சோகம்.. தேன்மொழியின் தந்தை குட்டி ரமேஷ் காலமானார் !!
விஜய் டிவியில் தொடரும் சோகம்.. தேன்மொழியின் தந்தை குட்டி ரமேஷ் காலமானார் !!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு சோகச் சமபவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நடிகர்கள், நடிகைகள், நடிகர்களின் உறவினர்கள் என பலரும் உயிரிழந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. பாடகர் எஸ்பிபி, நடிகர் விவேக், இயக்குநர்கள் எஸ்.பி ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அண்மையில் நடிகர் நெல்லை சிவா அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அண்மைக்காலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்தார். இதனால் இவர் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிமுகமான நடிகரானார். இதனால் அத்தொடர் நட்சத்திரங்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல தொடரின் மற்றொரு நடிகர் உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ். இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

