குட்டி ஸ்டோரி: கவுதம் மேனன், அமலா பால் நடிக்கும் எதிர்பாரா முத்தம்..!

குட்டி ஸ்டோரி: கவுதம் மேனன், அமலா பால் நடிக்கும் எதிர்பாரா முத்தம்..!

குட்டி ஸ்டோரி: கவுதம் மேனன், அமலா பால் நடிக்கும் எதிர்பாரா முத்தம்..!
X

தமிழ் சினிமாவில் தற்போது ஆந்தாலாஜி படத்தின் வரவு அதிகமாகிவிட்டது. அந்த வரிசையில் கவுதம் மேனன், அமலா பால், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள குட்டி ஸ்டோரி படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள ஆந்தாலாஜி படம் ‘குட்டி ஸ்டோரி’. கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல். விஜய் மற்றும் நலன் குமாராசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.சமகால காதலை மையக் கருவாக வைத்து, நான்கு விதமான கதைகளங்களில் குட்டி ஸ்டோரி படம் தயாராகியுள்ளது. இதில் கவுதம் மேனன் இயக்கியுள்ள படத்தில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது படத்தில் இவருடைய பகுதிக்கு ‘எதிர்பாரா முத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இளம் பருவ காதல் மற்றும் காமம் இல்லா காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன், அமலா பாலுடன் வினோத் கிஷன் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல ஏ.எல். விஜய் இயக்கும் பகுதிக்கு ‘அவனும் நானும்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இதில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர். மது இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள பகுதிக்கு லோகம் எனவும், நலன் குமாராசாமி இயக்கியுள்ள பகுதிக்கு ’ஆடல் பாடல்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளன. வெங்கட் பிரபு படத்தில் வருண் மற்றும் சாக்‌ஷி அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நலன் குமாரசாமி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமா ஆர்வலர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’குட்டிஸ்டோரி’ வரும் 12ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.


Tags:
Next Story
Share it