Theme Check

மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு..!!

மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு..!!

மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு..!!
X

பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் எல். முருகனுக்கு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி அவர் ஒன்றிய இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

எல். முருகன் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தலில் அவர் போட்டியிட்டாக வேண்டும்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.

Tags:
Next Story
Share it