கொரோனா இழப்பீடு பெற கடைசி தேதி.. தமிழக அரசு அறிவிப்பு !!
கொரோனா இழப்பீடு பெற கடைசி தேதி.. தமிழக அரசு அறிவிப்பு !!

கொரோனா இழப்பீடு தொகையான ரூ.50 ஆயிரம் பெற மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது கொரோனா பெரும்தொற்று. கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடமில்லை என்ற நிலையை சந்திக்க வைத்தது கொரோனா தொற்று.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாச நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையை பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
.
newstm.in

