Theme Check

கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி மருத்துவரின் கடைசி வீடியோ!!

கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி மருத்துவரின் கடைசி வீடியோ!!

கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி மருத்துவரின் கடைசி வீடியோ!!
X

டெல்லியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான பல் மருத்துவர் கொரோனாவுடன் போராடி அதற்கு பலியாகி விட்ட நிலையில், இறப்பதற்கு முன் அவர் கொரோனா குறித்து வெளியிட்ட கடைசி வீடியோவை அவரது கணவர் வெளியிட்டுள்ளார்.

34 வயதான டிம்பிள் அரோரா சவுலா என்ற பெண் மருத்துவருக்கு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது அவர் 2-ம் முறையாக கருவுற்று 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொற்று தீவிரமாகி, இரண்டு வாரங்களில் அவரது குழந்தை கருவிலேயே இறந்து போனது. அதற்கு அடுத்த நாள் டிம்பிள் அரோராவும் கொரோனாவுக்கு பலியாகி விட்டார்.

இறப்பதற்கு முன் கடந்த மாதம் 17-ம் தேதி தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் அனுப்பிய வீடியோ செய்தியில், யாரும் கொரோனாவை எளிதாக கருத வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது மனைவியின் விருப்பப்படி, மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த வீடியோவை வெளியிட்டதாக கணவர் ரவிஷ் சவுலா தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it