சங்கடத்தில் லதா ரஜினிகாந்த்.... கண்டு கொள்ளாத ரஜினி
சங்கடத்தில் லதா ரஜினிகாந்த்.... கண்டு கொள்ளாத ரஜினி

தமிழ்நாடு பாஜக நிர்வாகியும் நடிகையுமான மதுவந்தி, கடன் கொடுத்த நிதி நிறுவனத்திற்கு மாதாந்திரத் தவணையை செலுத்தத் தவறியுள்ளார். கடன் வழங்கிய நிதி நிறுவனம், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, போலீஸ் துணையுடன் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2ஆவது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் மதுவந்தி ரூ.1 கோடி கடனாக பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மற்றும் வட்டி கட்டி அதன் பின்னர் தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, நிதி நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக மதுவந்தியிடம் தகவல் தெரிவித்து வந்தனர். தவணையை கட்ட சொல்லியும் மதுவந்தி பணம் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ 1,21,28,384 கோடி பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், உரிய பதிலை மதுவந்தி அளிக்காததால், மெட்ரோ பாலிட்டன்- அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு நிதி நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சீல் வைக்க வேண்டாம், தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று அதிகாரிகளிடம் மன்றாடிப் பார்த்தார். ஆனாலும் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. மதுவந்தி மன்றாடிய வீடியோ சமூகத்தளங்களில் வெளியாகி வைரலாகவும் போனது. சங்கடத்தில் லதா ரஜினிகாந்த்.... கண்டு கொள்ளாத ரஜினி
இந்நிலையில் சீல் வைத்த நிதி நிறுவனம், வீட்டை ஏலத்திற்கு விடுவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளது. வைப்புத் தொகையாக 15 லட்சம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும் குறைந்தபட்ச ஏலத்தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சீல் வைக்கப்பட்ட டெண்டர் மூலம் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். நவம்பர் 29ம் தேதி மாலை 3 மணிக்கு டெண்டர்கள் திறக்கப்பட்டு அதிகத் தொகைக்கு கேட்டவர்களுக்கு ஏலம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

நவம்பர் 19ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை நேரில் பார்வையிடலாம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

