துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் வழக்கறிஞர் கொடூர கொலை.. பெரும் பதற்றம் !
துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் வழக்கறிஞர் கொடூர கொலை.. பெரும் பதற்றம் !

காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி. இவர் வழக்கு விசாரணைக்காக தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள ஆனேக்கல் நீதிமன்றத்துக்கு காரில் வந்தார். பின்னர் பணி முடிந்து இரவு 8 மணியளவில் அவர் தனது காரில் பெங்களூரு நோக்கி திரும்பி சென்றுக் கொண்டிருந்தார்.
ஆனேக்கல் சந்தாபுரம் சாலையில் வெங்கடேஸ்வர தியேட்டர் அருகில் இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ராஜசேகர் ரெட்டியின் காரை வழிமறித்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் அவரை காருக்குள்ளேயே படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் காரில்யே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற ஆனேக்கல் போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஆனேக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.i n

