Theme Check

நீதிமன்றத்திற்குள் வக்கீல் வெட்டிப் படுகொலை.. சிதறி ஓடிய மக்கள் !!

நீதிமன்றத்திற்குள் வக்கீல் வெட்டிப் படுகொலை.. சிதறி ஓடிய மக்கள் !!

நீதிமன்றத்திற்குள் வக்கீல் வெட்டிப் படுகொலை.. சிதறி ஓடிய மக்கள் !!
X

கர்நாடகாவில் விஜயநகரா மாவட்டத்தின் ஹோஸ்பேட்டில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. த்திற்குள் இருந்த 48 வயதான வழக்கறிஞர் ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துனிகர சம்பவம் வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் விஜயநகரா மாவட்டத்தின் ஹோஸ்பேட்டில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மனோஜ்(22) என்ற இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷை கழுத்திலும், மார்பிலும் சரமாரியாக குத்தினார்.

இதனால் அவருடன் இருந்த நண்பர்கள் சிதறி ஓடினர். மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த கொலையை நேரில் பார்த்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள், போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனையடுத்து அங்கு ஓடிய போலீசார் கொலையாளி மனோஜை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே கத்தியால் குத்தப்பட்ட வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞர் மனோஜை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததும் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் சொத்து தகறாரா என்பதும் தெரியவரவில்லை.

கொல்லப்பட்ட வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்பதால் வேறு ஏதேனும் காரணத்தினால் கொல்லப்பட்டிருப்பாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it