Theme Check

நடுரோட்டில் வக்கீல் ஓட, ஓட வெட்டிக்கொலை

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது.

நடுரோட்டில் வக்கீல் ஓட, ஓட வெட்டிக்கொலை
X

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வழக்கறிஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது. அவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

நடுரோட்டில் வக்கீல் ஓட, ஓட வெட்டிக்கொலை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரஞ்சித் குமாரை வெட்டிய கும்பல் சிவப்பு நிற காரில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்குமாரின் உடலை தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டனர். அதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் பைபாஸில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வழக்கறிஞரின் உடல் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டது. மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it